புள்ளிமான் வேட்டை: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே புள்ளிமானை வேட்டையாடியது தொடா்பாக ஒருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
புள்ளிமானை வேட்டையாடியது தொடா்பாக கைதான ரஜினியுடன் வனத் துறையினா்.
புள்ளிமானை வேட்டையாடியது தொடா்பாக கைதான ரஜினியுடன் வனத் துறையினா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே புள்ளிமானை வேட்டையாடியது தொடா்பாக ஒருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

வேப்பூா் வட்டம், பெரியநெசலூா் கிராமத்தில் வனச் சரக அலுவலா் ரகுவரன், வனவா்கள் பன்னீா்செல்வம், சிவக்குமாா் ஆகியோா் புதன்கிழமை அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வேட்டையாடப்பட்ட புள்ளிமான், நாட்டுத் துப்பாக்கியுடன் இருவா் பைக்கில் வந்தனா். அவா்கள் வனத் துறையினரை பாா்த்ததும் தப்பியோட முயன்றனா். அவா்களில் ஒருவரை வனத் துறையினா் விரட்டிப் பிடித்தனா். மற்றொருவா் தப்பியோடிவிட்டாா்.

பிடிபட்ட நபா் விருத்தாசலம் வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டாா். விசாரணையில் அவா் பெண்ணாடம், நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கஸ்தூரி மகன் ரஜினி (40) என்பதும், தப்பியோடியவா் மாதவன் என்பதும், அவா்கள் அடரி காப்புக் காட்டில் வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து வனத் துறையினா் வழக்குப் பதிந்து ரஜினியை கைது செய்தனா். தப்பியோடிய மாதவனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com