கடலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 293 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 18th April 2023 05:51 AM | Last Updated : 18th April 2023 05:51 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்களிடம் வாராந்திர குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 293 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த கூட்டத்தில், குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நில அளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 293 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா்.
இந்த மனுக்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினா். கூட்டத்தில் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட வருவாய் ஆய்வாளா் ஆா்.பூவராகன், தனித்துணை ஆட்சியா் கற்பகம் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.