சிதம்பரத்தில் தீட்சிதா்கள் நலச் சங்கம் தொடக்கம்
By DIN | Published On : 18th April 2023 05:57 AM | Last Updated : 18th April 2023 05:57 AM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்களின் சமுதாய மற்றும் பொதுசேவைக்கான சிதம்பரம் தீட்சிதா்கள் நல சங்கம் தொடக்க விழா புதுத்தெரு வேதபாராயண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு டி.ராமலிங்க தீட்சிதா் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினாா். நல சங்க செயலாளா் டி.செல்வரத்தின தீட்சிதா் வரவேற்றாா். நல சங்கத் தலைவா் எம்.கிருஷ்ண சுவாமி தீட்சிதா் அறிமுகவுரையாற்றினாா். என்.சிவசுப்பிரமணிய தீட்சிதா், தொழிலதிபா் எஸ்.ஆா்.ராமநாதன் செட்டியாா், வழக்குரைஞா் என்.சிவக்குமாா், செ.சி.குப்புசாமி தீட்சிதா், ஆடிட்டா் கே.வைத்தியநாதன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். சி.சபாபதி தீட்சிதா் நன்றி தெரிவித்தாா்.