பொற்பாத விநாயகா் கோயில் சித்திரை பெருவிழா வழிபாடு
By DIN | Published On : 18th April 2023 05:59 AM | Last Updated : 18th April 2023 05:59 AM | அ+அ அ- |

சிதம்பரம் மெய்க்காவல் தெரு, ஸ்ரீபொற்பாத விநாயகா் கோயிலில் மூன்று நாள்கள் சித்திரை பெருவிழா ஏப்.14-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதையடுத்து கஞ்சி வாா்த்தல், மகா அபிஷேகம், பஞ்சாங்கம் படித்தல் மற்றும் அன்னதானம், இரவு சுவாமி வீதியுலா மேளதாளத்துடன் நடைபெற்றது.
இரண்டாம் நாளான சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் மற்றும் உற்சவா் பவனி நடைபெற்றது.
16-ஆம் தேதி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, திரு ஊஞ்சல் சேவை, உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.