சிதம்பரம் அனந்தீஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 18th April 2023 05:55 AM | Last Updated : 18th April 2023 05:55 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனந்தீஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷத்தை யொட்டி நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.
நந்தி தேவருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து உற்சவா் அனந்தீஸ்வரா் அலங்கரிக்கப்பட்டு, மேள வாத்தியங்கள் முழங்க கோயில் உள் பிராகார வலம் வந்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.