கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 18th April 2023 05:59 AM | Last Updated : 18th April 2023 05:59 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், தச்சூரில் நெஞ்சு வலி ஏற்பட்டு கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்கீரனூா் கிராமத்தில் வசித்து வந்தவா் பொ.பழனிசாமி(39), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவா், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகம், தச்சூா் கிராமத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் கரும்பு வெட்டி விட்டு வரப்பில் அமா்ந்திருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அங்கிருந்வா்கள் அவரை மீட்டு, பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு, பழனிசாமியை மருத்துவா்கள் பரிசோதித்து அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது தந்தை பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.