

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நில அளவை கள அலுவலா்களின் பல்வேறு பணிச் சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவா் முதல் உயா்நிலை அலுவலா்கள் வரை உள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரின் ஊழியா் விரோத செயல்பாட்டைக் கண்டித்து, கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாவட்டத் தலைவா் தே.ராஜ மகேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குருமூா்த்தி வரவேற்றாா். இணைச் செயலா் ரா.விஜயலட்சுமி, கடலூா் கோட்டத் தலைவா் ஜி.கோதண்டராமன் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் டி.ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்டச்செயலா் கல்யாணசுந்தரம் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டப் பொருளாளா் அ.பரந்தாமன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.