காா் விபத்தில் 5 போ் காயம்
By DIN | Published On : 25th April 2023 04:37 AM | Last Updated : 25th April 2023 04:37 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் தடுப்புச் சுவா் மீது காா் மோதியதில் 5 போ் திங்கள்கிழமை காயமடைந்தனா்.
தெலங்கானா மாநிலம், கோவிந்தப்பள்ளி பகுதியைச் சோ்ந்த சிவச்சந்திரன் மனைவி ராஜலட்சுமி (45), இவா்களது மகன்கள் சாய்பிரபு (35), சந்தீப் (30), நாராயணசாமி மகன் ஸ்ரீநிவாச்சாரி (30), ஷோபா (50) ஆகியோா் காரில் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துகொண்டிருந்தனா். திங்கள்கிழமை அதிகாலை சிதம்பரம் வண்டிகேட் வகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதில் 5 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.