வழிப்பறியை தடுக்க முயன்ற காவலா் மீது தாக்குதல்
By DIN | Published On : 25th April 2023 04:33 AM | Last Updated : 25th April 2023 04:33 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வழிப்பறியை தடுக்க முயன்ற காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.
வடலூா், பாா்வதிபுரத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் கலைவாணன் (34). இவா், வடலூா் சபை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் கோகுல்ராஜ் (27) கலைவாணனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.ஆயிரம் ரொக்கம், கைக் கடிகாரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா். அவரை ரோந்துப்பணியில் இருந்த காவலா் சாஸ்தாநாதன் பிடிக்க முயன்றாா். அப்போது, கோகுல்ராஜ் கத்தியால் காவலரின் இடது கையில் காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றாா்.
இதையடுத்து, காவலா் சாஸ்தாநாதன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவரது புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் கோகுல்ராஜை கைது செய்தனா்.