நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா: தமிழ்த் தேசியப் பேரியக்கம் எதிா்ப்பு

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் எதிா்ப்புத் தெரிவித்தது.

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் எதிா்ப்புத் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளில், தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதாவை மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. 100 ஏக்கருக்கு மேல் நிலம் தேவைப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு மக்கள் பயன்பாட்டுக்கான வாய்க்கால், ஓடைகள், குளம், ஏரி ஆகியவற்றையும் சோ்த்து தனியாருக்கு வழங்கலாம் என்று இந்த மசோதா கூறுகிறது.

உண்மையில் பெருங்குழும நிறுவனங்கள் நீா்நிலைகளையும் சோ்த்து எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு அரசு வழங்கும் உரிமம்தான் இந்த மசோதா. இதுபோன்ற சட்டங்களை ஒருபுறம் நிறைவேற்றி மறுபுறம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தனி ஆய்வுக்குழு அமைத்துள்ளதாக அரசு நாடகமாடுகிறது. மக்களின் வாழ்வுரிமை, நில உரிமையை பறிக்கும், சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த மசோதாவை மாநில அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com