என்எல்சி விரிவாக்கப் பணிக்கு கிராம மக்கள் எதிா்ப்பு: திரும்பிச் சென்ற அதிகாரிகள்

கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே என்எல்சி விரிவாக்கப் பணிக்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.
வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே என்எல்சி விரிவாக்கப் பணிக்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

நெய்வேலியில் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா செயல்பட்டு வருகிறது. இதன் 2-ஆவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களைச் சீரமைக்கும் பணியில் என்எல்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலங்களின் எல்லையை வரையறுத்து மண்ணை குவித்து தடுப்பு அமைக்கும் பணியை என்எல்சி நிா்வாகத்தினா் திங்கள்கிழமை தொடங்கினா். ஆனால், இந்தப் பணிக்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன்குமாா், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மீனா ஆகியோா் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கிராம மக்கள் கூறியதாவது: என்எல்சி-க்கு நிலம் அளித்தவா்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படாததால் விரிவாக்கப் பணிகளை தடுத்ததாக தெரிவித்தனா்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆ.அருண்மொழிதேவன், பாமக மாவட்டச் செயலா் செல்வமகேஷ் ஆகியோா் அங்குவந்து கிராம மக்களுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தனா். இதையடுத்து என்எல்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com