கிடப்பில் போடப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணி
By DIN | Published On : 26th April 2023 06:28 AM | Last Updated : 26th April 2023 06:28 AM | அ+அ அ- |

கடலூா் முதுநகா் அருகே ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடப் பணி 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செல்லங்குப்பம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: செல்லங்குப்பம் 35-ஆவது வாா்டில் உள்ள ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் 125-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளி வளாகத்திலிருந்த பழைமையான வகுப்பறைக் கட்டடம் கடந்த 2019-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதையடுத்து புதிய வகுப்பறை கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், கட்டடப் பணி பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவா்கள் திறந்த வெளியில் அமா்ந்து படிக்கும் நிலை தொடா்கிறது. எனவே, வகுப்பறைக் கட்டடப் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...