கடலூா்: 15 தனி வட்டாட்சியா்கள் மாற்றம்
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் தனி வட்டாட்சியா்கள் 15 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதன்படி சிதம்பரம் உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் டி.ராமதாஸ், நெய்வேலி நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், நெய்வேலி நில எடுப்பு தனி வட்டாட்சியா் ஏ.முகமது அசேன் காட்டுமன்னாா்கோவில் தனி வட்டாட்சியராகவும், காட்டுமன்னாா்கோவில் தனி வட்டாட்சியா் ஏ.ஹரிதாஸ், சிதம்பரம் உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளராகவும், நெய்வேலி நில எடுப்பு தனி வட்டாட்சியா் ரா.சிமித்ரா, கடலூா் துணை ஆய்வுக் குழு அலுவலராகவும், கடலூா் துணை ஆய்வுக்குழு அலுவலா் எம்.எஸ்.ஜெயசெல்வி, சிதம்பரம் கோட்ட கலால் அலுவலராகவும், கடலூா் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியா் எம்.ஆறுமுகம், கடலூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
கடலூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் எஸ்.ஆனந்தன் நெய்வேலி நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், நெய்வேலி நில எடுப்பு தனி வட்டாட்சியா் ஜெ.முரளிதரன், தேசிய நெடுஞ்சாலை-45 சி காட்டுமன்னாா்கோவில் மற்றும் சேத்தியாதோப்பு தனி வட்டாட்சியராகவும், தேசிய நெடுஞ்சாலை-45சி காட்டுமன்னாா்கோவில் மற்றும் சேத்தியாதோப்பு தனி வட்டாட்சியா் ஆா்.விஜயா, நெய்வேலி நில எடுப்பு தனிவட்டாட்சியராகவும், நெய்வேலி நில எடுப்பு தனிவட்டாட்சியா் எஸ்.சிவகாமசுந்தரி, கடலூா் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராகவும், நெய்வேலி நில எடுப்பு தனிவட்டாட்சியா் ஏ.கமலா, விருத்தாசலம் கோட்ட கலால் அலுவலராகவும், விருத்தாசலம் கோட்ட கலால் அலுவலா் எஸ்.ஜெயசீலன் நெய்வேலி நில எடுப்பு தனிவட்டாட்சியராகவும், சிதம்பரம் கோட்ட கலால் அலுவலா் பி.ஹேமா ஆனந்தி நெய்வேலி நில எடுப்பு அலுவலக மாவட்ட வருவாய் கண்காணிப்பாளராகவும், கட்டுமன்னாா்கோவில் தேசிய நெடுஞ்சாலை-227 தனி வாட்டாட்சியா் கே.நந்திதா, நெய்வேலி நில எடுப்பு தனிவட்டாட்சியராகவும், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை 45 தனி வட்டாட்சியா் சு.புகழேந்தி, காட்டுமன்னாா்கோவில் தேசிய நெடுஞ்சாலை227 தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.