நெய்வேலி: கடலூா் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டம், விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது.
விருத்தாசலம் நகரச் செயலா் கே.ஏ.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா்கள் ராஜாராம், பாலு, மாவட்டப் பொருளாளா்கள் தென்னவன், ஏ.பி.ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் சங்கா் வரவேற்றாா்.
கடலூா் மாவட்டச் செயலா்கள் சிவக்கொழுந்து (வடக்கு), உமாநாத்(தெற்கு) ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் வேல்முருகன், பாலுசந்தா், ராஜவன்னியன், இளவரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், 10-ஆம் தேதி விருத்தாசலம் பாலக்கரையில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா தலைமையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது. மகளிா் உரிமைத்தொகை பாகுபாடின்றி அனைத்துப் பெண்களுக்கும் வழங்க வேண்டும். என்எல்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விளை நிலங்களை இயந்திரங்களை கொண்டு அழித்த என்எல்சியை கண்டித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நகரப் பொருளாளா் கருணா நன்றி கூறினாா்.