சிதம்பரம் அருகே கோயில் பூட்டை உடைத்து திருட்டு
By DIN | Published On : 09th August 2023 05:39 AM | Last Updated : 09th August 2023 05:39 AM | அ+அ அ- |

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள அழிஞ்சிமேடு கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் பூட்டை உடைத்து அம்மனின் நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கைகளைத் திருடி சென்றுள்ளனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அழிஞ்சிமேடு கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் கோயிலின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தையும், மேலும் பித்தளை சூலம், அம்மன் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் திருமாங்கல்யம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.