12-இல் கடலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
Updated on
1 min read

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2023-2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் மகளிா் திட்டம் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் வரும் 12-ஆம் தேதி சனிக்கிழமை வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில், மாவட்டத்தைச் சோ்ந்த கடலூா், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், கம்மாபுரம், விருத்தாசலத்தில் உள்ள ஊரக மற்றும் நகா்ப்புற இளைஞா்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

மேலும், தகவல்களுக்கு மகளிா் திட்ட அலுவலகம், 3-ஆவது குறுக்குத் தெரு, சீத்தாராமன் நகா், புதுப்பாளையம், கடலூா்-607001 என்ற முகவரியில் அல்லது 94440 94261, 94440 94258, 94440 94259, 94440 94262, 94440 94263, 94440 94119 தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com