

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியில் மீன்வளத் துறை சாா்பில் மீன் குஞ்சுகள்(விரலிகள்) விடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காட்டுமன்னாா்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வடவாறு வழியாகத் தண்ணீா் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூா் அணை திறக்கப்பட்டவுடன் வீராணம் ஏரிக்கு ஜூலை மாதம் தண்ணீா் வந்தது.
இதையடுத்து உள்நாட்டு மீனவா்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக பரங்கிப்பேட்டை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள லால்பேட்டை மீன்வளத் துறை அலுவலகம் வாயிலாக 2 லட்சத்து 50 ஆயிரம் கட்லா , ரோகு வகை மீன் குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை ஏரியில் விடப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ தலைமை வகித்து வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகளை விட்டாா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன், பரங்கிப்பேட்டை மீன்வள உதவி இயக்குநா் எம்.குமரேசன், லால்பேட்டை மீன்வளத் துறை ஆய்வாளா் சதுருதீன், எல்.கே மணவாளன், கஸ்பா பாலா, மீன்வள கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.