

மணிப்பூா் மாநிலத்தில் பழங்குடியினா் மீது தொடரும் வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்து பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா், பொதுநல இயக்கங்கள் சாா்பில் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச் செயலா் சு.ஆறுமுகம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ச.விக்னேஷ், மு.சசிக்குமாா், வே.சுப்பிரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் கோ.ஆதிமூலம் வரவேற்றாா். ரா.மங்கையா்செல்வம், கோ.தண்டபாணி, க.எழிலேந்தி, ஐ.அஸ்மா நசுருதீன், பிரபா.கல்விமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தை ரா.பாபு ஒருங்கிணைத்தாா். விஜயகுமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.