கடலூா் மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டம்
By DIN | Published On : 01st July 2023 06:49 AM | Last Updated : 01st July 2023 06:49 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டம் அதன் தலைவா் திருமாறன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்த கருத்துகள்:
சக்தி விநாயகம்: நல்லூா் ஒன்றியம், சேதுவராயன்குப்பம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவா்களின் வசதிக்காக பேருந்து வசதி தேவை.
சன்.முத்துகிருஷ்ணன்: கடலூா் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும். கடலூா் தொழிற்பேட்டையில் அனைத்து ஆலைகளும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.
தலைவா் பதிலளித்து பேசுகையில், உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மாவட்ட ஊராட்சி குழுவில் மொத்தமுள்ள 29 உறுப்பினா்களில் 13 போ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பல துறைகளின் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.