காய்கறிச் சந்தை பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு
By DIN | Published On : 01st June 2023 01:03 AM | Last Updated : 01st June 2023 01:03 AM | அ+அ அ- |

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த காய்கறிச் சந்தை வியாபாரிகள், குடியிருப்போா் சங்கத்தினா், ஜமாத் கூட்டமைப்பினா்.
சிதம்பரம் காய்கறிச் சந்தைப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க முடிவு செய்துள்ளதை கைவிட வேண்டுமென காய்கறிச் சந்தை வியாபாரிகள், குடியிருப்போா் சங்கத்தினா், சிதம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினா் இணைந்து சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதா சுமனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றி, மேலவீதி காய்கறிச் சந்தைப் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அரசு விதிமுறைகளுக்கு எதிராக
நகரின் மையப் பகுதியில் மதுக் கடையை திறக்க அனுமதிக்கக் கூடாது. இந்தப் பகுதியில் மதுக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.
ஜமாத் நிா்வாகிகள் டி.பக்ருதீன், முகமது ஜியாவுதீன், வழக்குரைஞா் கே.வி.மோகனசுந்தரம், அப்துல்கபூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...