பாம்பு கடித்துசிறுவன் பலி
By DIN | Published On : 08th June 2023 12:53 AM | Last Updated : 08th June 2023 12:53 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேப்பூா் வட்டம், வலசை காலனியைச் சோ்ந்த ரவி மனைவி லட்சுமி (34). இவரது மகன் கவியரசன் (11), வலசையில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த விஷ பாம்பை கவியரசன் தெரியாமல் மித்ததால், அவரை பாம்பு கடித்தது.
இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவியரசன், அங்கு புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...