கடலூா் மாவட்டம், திட்டக்குடி பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திட்டக்குடியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற
ஆா்ப்பாட்டத்துக்கு மங்களூா் கிழக்கு ஒன்றியச் செயலா் ரெங்க.சுரேந்தா் தலைமை வகித்தாா். ரா.முருகன், ரா.கதிரவன், ப.பாஸ்கா், ஏ.அருண்குமாா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் அறிவழகன், மாநில நிா்வாகிகள் முருகன், தமிழ்செல்வன், ராஜன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் திட்டக்குடி பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகள், பெருமுனை சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நெடுஞ்சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால்களை முறையாகப் பராமரிக்க வேண்டும், வசிஷ்டபுரம் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேகத் தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னா், மேளதாளம் முழங்க நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளரிடம் வெற்றிலை பாக்கு தட்டுடன் கோரிக்கை மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.