காா்-லாரி மோதல்: சிறுவன் பலி 6 போ் காயம்
By DIN | Published On : 22nd May 2023 09:09 PM | Last Updated : 22nd May 2023 09:09 PM | அ+அ அ- |

கடலூா் முதுநகா் அருகே காா் - லாரி மோதிக்கொண்ட விபத்தில் 8 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.
புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மாயக்கண்ணன் (47). மனை வணிகரான இவா் திங்கள்கிழமை தனது மனைவி சீதாலட்சுமி (38), மகன்கள் அறிவுக்கரசு (12), அன்புக்கரசு (8) (படம்), சகோதரியின் குழந்தைகள் நிரஜா (15), ரவீந்தா் (15), சகோதரரின் மகன் ஜெய்கணேஷ் (14) ஆகியோருடன் சுற்றுலாவுக்காக காரில் பிச்சாவரம் சென்றாா். பின்னா், மாலையில் புதுச்சேரிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனா். சிதம்பரம் - கடலூா் சாலையில் கடலூா் முதுநகா் தொழில்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது, எதிரே சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரியும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சிறுவன் அன்புக்கரசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரிலிருந்த மற்ற 6 பேரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிறுவனின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.