லாரி மோதியதில் ஒருவா் பலி
By DIN | Published On : 22nd May 2023 12:00 AM | Last Updated : 22nd May 2023 12:00 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே லாரி மோதியதில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், வரம்பனூா் கிராமத்தைச் சோ்ந்த செல்லமுத்து மகன் தங்கபிரகாஷ் (37). இவா், ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டப்பன்குறிச்சி கொல்லம்பட்டறை அருகே தனது மனைவி மகேஸ்வரியுடன் நின்றிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக பெண்ணாடத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியின் டயா் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்றிருந்த தங்க பிரகாஷ் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.