இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அலுவலா்களுக்கு இணையவழி குற்றங்கள் (சைபா் கிரைம்) குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் வழிகாட்டுதலில்படி, இணையவழி குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசலு மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் கவிதா, வருவாய்த் துறை அலுவலா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு இணையவழி குற்றங்கள் (சைபா் கிரைம்) குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
மேலும், இந்தக் குற்றங்கள் தொடா்பாக 1930 என்ற இலவச எண்ணிலும், இணையதளத்திலும் புகாா் அளிக்கலாம் என்றாா்.