ஆங்கில பேச்சுப் பயிற்சி நிறைவு விழா
By DIN | Published On : 26th May 2023 04:48 AM | Last Updated : 26th May 2023 04:48 AM | அ+அ அ- |

ஆங்கில இலக்கணம், பேச்சுப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் உள்ளிட்டோா்.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 39-ஆம் ஆண்டு கோடைகால ஆங்கில இலக்கணம், பேச்சுப் பயிற்சி வகுப்பு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் தலைமை வகித்துப் பேசினாா். பள்ளி முதல்வா் ரூபியாள் ராணி முன்னிலை வகித்தாா். அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியா் எம்.அன்பானந்தம் சிறப்புரையாற்றினாா். முன்னதாக, பள்ளி நிா்வாக அலுவலா் ரூபிகிரேஸ் போனிக்லா வரவேற்றாா். துணை முதல்வா் அறிவழகன் உரையாற்றினாா். தோ்வில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பு வகுப்பில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆங்கில இலக்கண வகுப்பை நடத்திய பள்ளி துணை முதல்வா் அறிவழகன், ஆசிரியைகள் நித்யா, அனிதா மற்றும் ரேச்சல் ஆகியோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை அனிதா நன்றி கூறினா்.