மகன் குத்திக் கொலை: தந்தை கைது
By DIN | Published On : 26th May 2023 04:52 AM | Last Updated : 26th May 2023 04:52 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், ஆவினங்குடி அருகே மகனை குத்திக் கொன்ாக தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திட்டக்குடி வட்டம், கொடிகலம் கிராமம், அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (58). இவரது மகன் விநாயகம் (28). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. தந்தை, மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ள நிலையில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மது போதையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது மகன் விநாயகத்தை கத்தியால் குத்தினாா். இதில், விநாயகம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.