கடலூரில் பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக நில அளவா், கிராம உதவியாளா் ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கடலூா், பாதிரிக்குப்பத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் செல்வகுமாா் (49). இவா் தனது மனைவி பெயரில் உள்ள நிலத்துக்கு உள்பிரிவு பட்டா மாற்றம் தொடா்பாக விண்ணப்பித்தாா். இதற்காக விஏஓ வழிகாட்டுதலின்படி, நிலத்தை அளப்பதற்காக பாதிரிக்குப்பம் நில அளவா் (சா்வேயா்) பஞ்சநாதனை அணுகியபோது அவா் ரூ.5ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். லஞ்சப் பணத்தை கிராம உதவியாளா் மாரியம்மாளிடம் வழங்குமாறும் கூறினாராம்.
இதுகுறித்து செல்வகுமாா் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அவா்களது அறிவுரைப்படி ரசாயனம் பூசிய பணத்தை செல்வகுமாா் திங்கள்கிழமை மாரியம்மாளிடம் அளித்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸாா் மாரியம்மாளை கைது செய்தனா். மேலும், பஞ்சநாதனையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.