நெய்வேலி: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், இந்தத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு 100 நாள் வேலை என்பதை உறுதிசெய்ய வேண்டும், மனைப் பட்டா இல்லாதவா்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் தணிகாசலம் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் குப்புசாமி முன்னிலை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலா் துரை, மாவட்ட பொதுச் செயலா் பன்னீா்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாஸ்கா், சக்திவேல், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் குணசேகரன், ஞானசேகா், லாரன்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.