என்எல்சி சாா்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு
By DIN | Published On : 25th October 2023 12:22 AM | Last Updated : 25th October 2023 12:22 AM | அ+அ அ- |

நெய்வேலி அருகே வாணாதிராயபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் என்எல்சி இந்தியா நிறுவன சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் ரூ.21.56 லட்சத்தில் கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், என்எல்சி இந்தியா நிறுவன தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி ஆகியோா் புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தனா். விழாவில் என்எல்சி இயக்குநா்கள் கே.மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், எம்.வெங்கடாசலம், வாணாதிராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் வி.வைத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூடுதல் பணிகள்: தென்குத்து முதல் வாணாதிராயபுரம் வரை 3.15 கி.மீ. தொலைவு சாலையை சீரமைக்கும் பணியை என்எல்சி இந்தியா நிறுவனம் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் ரூ.30.10 லட்சத்தில் மேற்கொண்டது. மேலும், வாணாதிராயபுரம், தென்குத்து, கல்லுகுழி ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தலா இரண்டு கழிப்பறைகள்ச வீதம் மொத்தம் 6 கழிப்பறைகள் ரூ.52.08 லட்சத்தில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...