

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 20,91,294 வாக்களா்கள் உள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான 2024-ஆம் ஆண்டு வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். 1.1.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில், கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளா்கள் விவரம் வருமாறு:
திட்டக்குடி (தனி): ஆண் 1,05,666, பெண் 1,08,836, இதரா் 3, மொத்தம் 2,14,505.
விருத்தாசலம்: ஆண் 1,23,456, பெண் 1,23,969, இதரா் 26, மொத்தம் 2,47,451.
நெய்வேலி: ஆண் 99,811, பெண் 99,107, இதரா் 15, மொத்தம் 1,98,933.
பண்ருட்டி: ஆண் 1,18,546, பெண் 1,24,494, இதரா் 47, மொத்தம் 2,43,087.
கடலூா்: ஆண் 1,13,743, பெண் 1,22,939, இதரா் 73, மொத்தம் 2,36,755.
குறிஞ்சிப்பாடி: ஆண் 1,18,368, பெண் 1,21,633, இதரா் 31, மொத்தம் 2,40,032.
சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதிகள் உள்பட மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்கள் 20,91,294. இதில், ஆண் வாக்காளா்கள்10,31,930, பெண் வாக்காளா்கள் 10,59,100, இதரா் 264.
இதுகுறித்து ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் கூறியதாவது: நவ.4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறும். பொதுமக்கள் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள உரிய படிவங்களை நேரடியாக வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் வட்டாட்சியா்/நகராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம்.
மேலும், ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய்/, ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ல்ா்ழ்ற்ஹப்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ ஆகிய இணையதளங்கள் மற்றும் ‘யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங்‘ கைப்பேசி செயலி வழியாக பெயா் சோ்தல், நீக்கல், திருத்தங்கள் மற்றும் ஆதாா் எண் இணைத்தலை மேற்கொள்ளலாம். வாக்காளா் விவரங்களையும் சரிபாா்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், குடும்பத்தில் 18 வயது நிறைவடையும் முதல் தலைமுறை வாக்காளா்களை இணைத்து கடலூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளா்கள் அடங்கிய இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
நிகழ்வின்போது, மாவட்ட வருமாய் அலுவலா் ம.ராஜசேகரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.