

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த ரௌடி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மந்தாரக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கொளஞ்சி (37), இந்திரா நகரில் பழக்கடை நடத்தி வருகிறாா். இவரது பழக்கடைக்கு செப்டம்பா் 16-ஆம் தேதி வந்த நெய்வேலியை அடுத்துள்ள வடக்கிருப்பு கிராமம், மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சஞ்சித் (23) பணம் கேட்டு மிரட்டல் விடுத்தாராம். கொளஞ்சி பணம் கொடுக்க மறுக்கவே, அவரை சஞ்சித் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து, சஞ்சித்தை கைது செய்தனா். இவா் மீது நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது. மேலும், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. எனவே, இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் ஓராண்டு குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சித் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.