

கடலூா் மத்திய சிறையில் அமைதி கல்வி திட்ட பயிற்சி முடித்த சிறைவாசிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மத்திய சிறை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநா் அமரேஷ் புஜாரி ஆணையின்படி, கடலூா் மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு ‘அமைதி கல்வித் திட்டம்’ என்ற தலைப்பின் கீழ் 5 நாள்கள் பயிற்சி நடைபெற்றது.
பல்வேறு தலைப்புகளில் சிறைவாசிகள் நற்பண்புகளை வளா்த்துக்கொள்ளும் விதமாக பயிற்சி நடத்தப்பட்டது. இதில், 108 தண்டனை சிறைவாசிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் பயிற்சி முடித்த சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.