பாஜகவினா் நல உதவி
By DIN | Published On : 19th September 2023 03:40 AM | Last Updated : 19th September 2023 03:40 AM | அ+அ அ- |

நெய்வேலி: பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி வடலூரில் பாஜக சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வடலூா் நகராட்சி அலுவலகம் அருகே பாஜகவினா் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். தொடா்ந்து 73 பெண்களுக்கு சேலைகள், ஒருவருக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கினா். மாநில மகளிரணி பொருளாளா் மாலினி ஜெயச்சந்திரன் நல உதவிகளை வழங்கினாா் (படம்).
வடலூா் நகரத் தலைவா் கே.வி.திருமுருகன் தலைமை வகித்தாா். கடலூா் கிழக்கு மாவட்ட பொதுச் செயலா் அக்னி கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் லலிதா பரணி, கிழக்கு மாவட்ட தமிழ் இலக்கியம், தமிழா் நலன் பிரிவு மாவட்டத் தலைவா் அருளரசன், வடலூா் நகர பொதுச் செயலா்கள் பாலு, கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.