

சிதம்பரம்: கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், சென்ட்ரல் ரோட்டரி சங்கம், வின்சாப்ஃட் கணினி பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி, வி.எஸ்.ஆா். நகரில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ந.ஜுனியா் சுந்தரேஷ் தலைமை வகித்து பேசினாா்.
சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் வி.நடனசபாபதி வரவேற்றாா். துணை ஆளுநா் சுனில்குமாா், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் பி.முகமதுயாசின், முன்னாள் துணை ஆளுநா் எம்.தீபக்குமாா், மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் கே.நிா்மலா, டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் ஹெச்.மணிகண்டன், சென்ட்ரல் ரோட்டரி சங்கச் செயலா் ஜி.ஆறுமுகம், ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
முகாமில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினா் பி.தேவசேனன், டாா்லிங்டன், எஸ்.சோபனாதேவி, டி.அரவிந்த், மிதுன், ஆா்.சரத்குமாா் ஆகியோா் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.