

சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுலா தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ‘பசுமை முதலீடுகள்’ என்ற கருப் பொருளில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதாசுமன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா். கடலூா் மாவட்ட சுற்றுலா அலுவலா் எல்.முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தூய்மை பேணுதல் முகாம்: மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் துாய்மை பேணுதல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட சுற்றுலா அலுவலா் எல்.முத்துசாமி, பிச்சாவரம் படகு குழாம் மேலாளா் பைசல் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.