சிதம்பரம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் அண்ணாமலைநகரில் உள்ள மாவட்ட அரசு செவிலியா் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை முதலுதவி பற்றிய முதல் நோக்குநிலை பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
செவிலியா் கல்லூரி முதல்வா் கமலா தலைமையில், செஞ்சிலுவை சங்கப் பயிற்றுநா் எஸ்.சம்பத் முதலுதவி பயிற்சி அளித்தாா். நிகழ்ச்சியை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் ரேணுகா ஒருங்கிணைத்தாா். உறுப்பினா்கள் தீபக்குமாா், புகழேந்தி, பிரேமா மொ்லின், சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.