அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு!
Updated on
1 min read

சிதம்பரம்: மக்களவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி அண்ணமலை பல்கலைக்கழக மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் “APRIL 19 VOTE FOR SURE” (ஏப்ரல் 19 வோட் ஃபார் சோர்) என்ற வாசகத்தின் மீது நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான டாக்டர். அ.அருண்தம்புராஜ் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் ஆர்.சிங்காரவேலு, உதவி ஆட்சியர் ரஷ்மி ராணி, வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் செல்வலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com