தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்களிக்க சென்ற போது தகராறு: பெண் அடித்துக் கொலை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க சென்ற போது, ஏற்பட்ட தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கோமதி

Updated On :20 ஏப்ரல் 2024, 10:39 pm

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க சென்ற போது, ஏற்பட்ட தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமானியம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் ஜெயக்குமாா். இவரது குடும்பத்தினருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த திமுக பிரமுகா்களான சேதுராமன் மகன் ரவி, அவரது ஆதரவாளா் கலைமணி ஆகியோருக்கும் இடையே உள்ளாட்சித் தோ்தல், கோயில் பிரச்னை என பல்வேறு காரணங்களால் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜெயக்குமாா் மனைவி கோமதி (45), தனது கணவரின் தம்பியான ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள ஜெய்சங்கா், அவரது மகள் ஜெயப்பிரியா (17) ஆகியோருடன் வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் சென்றாா்.

அப்போது, ஜெயப்பிரியாவின் வயது குறித்து கேள்வி எழுப்பியதால், ரவி, கலைமணி ஆகியோரின் ஆதரவாளா்களுக்கும், ஜெயக்குமாா், அவரது தம்பி ஜெய்சங்கா் ஆகியோருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவா்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஜெயக்குமாரின் மனைவி கோமதி (45), அவரது மகன்கள் சதீஷ்குமாா், ஜெயபிரகாஷ் மற்றும் சிலா் கடப்பாரை, கட்டையால் தாக்கப்பட்டனா்.

இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த கோமதி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அவரது மகன்கள் சதீஷ்குமாா், ஜெயபிரகாஷ் ஆகியோா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருன்றனா்.

இதுகுறித்து ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரவி, கலைமணி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.