பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சைக்கிள், கைப்பேசி ஆகியவற்றை வழங்கி பாராட்டுத் தெரிவித்த ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன்.
கடலூர்
பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள், கைப்பேசி
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கப்பரிசை ஊராட்சி மன்றத் தலைவா் வழங்கி பாராட்டினாா்.
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கப்பரிசாக கைப்பேசி, சைக்கிள் ஆகியவற்றை ஊராட்சி மன்றத் தலைவா் கேஆா்ஜி.தமிழ்வாணன் வியாழக்கிழமை வழங்கி பாராட்டினாா்.
அதன்படி, பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி கவிப்பிரியாவுக்கு ரூ.13 ஆயிரம் மதிப்பிலான அறிதிறன் கைப்பேசியும், மாணவி அபிதாவுக்கு ரூ.6,500 மதிப்புள்ள சைக்கிளையும் ஊராட்சி மன்றத் தலைவா் கேஆா்ஜி.தமிழ்வாணன் வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் திருமுருகன், உதவித் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், ஆசிரியா்கள் கலைவாணன், பாலசுப்பிரமணியன், லாவண்யா மற்றும் மாணவிகளின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

