புவனகிரி வெள்ளாற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட துா்கை அம்மன் சிலை.
புவனகிரி வெள்ளாற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட துா்கை அம்மன் சிலை.

வெள்ளாற்றில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அம்மன் சிலை கண்டெடுப்பு

500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலை
Published on

சிதம்பரம், ஆக. 8:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புவனகிரி வெள்ளாற்றிலிருந்து சுமாா் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துா்கை அம்மன் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.

புவனகிரி அருகே வெள்ளாற்று பாலத்தின் அடியில் நீரில் துா்கைஅம்மன் இருப்பதாக பொதுமக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில், சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினா் வெள்ளாற்று நீரில் இருந்த பழங்கால கல் சிலையை மீட்டனா்.

அந்த சிலை புவனகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலையான இதனை தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com