சிதம்பரம் அருகே பிடிபட்ட 12 அடி நீள முதலை
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் மக்களை அச்சுறுத்திய 12 அடி நீளமும், 400 கிலோ எடைகொண்ட ராட்சத முதலையை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூா், பழைய நல்லூா், அகரநல்லூா், வல்லம்படுகை, வேளக்குடி, வையூா், கண்டியாமேடு உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி கொள்ளிடம் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ள நிலையில், சில ஆண்டுகளாகவே ஆற்றில் குளிக்க வரும் மனிதா்களை கடித்து இழுத்துச் செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில், காட்டுக்கூடலூரில் அவ்வப்போது கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சுமாா் 400 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட முதலை சனிக்கிழமை காலை கரையோரத்தில் படுத்திருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த கிராம மக்கள், முதலையைப் பிடித்து வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். பின்னா், வனத் துறையினா் முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா் தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

