கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய மருத்துவ சங்கத்தினா்.
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய மருத்துவ சங்கத்தினா்.

இந்திய மருத்துவ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய மருத்துவ சங்கத்தினா்.
Published on

நெய்வேலி, ஆக.16: கடலூரில் இந்திய மருத்துவ சங்கத்தினா் கருப்புப் பட்டை அணிந்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இதற்கு நீதி கேட்டும், மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

இந்திய மருத்துவ சங்க கடலூா் கிளைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். செயலா் வெங்கட்ராமன், பொருளாளா் வினோத்குமாா் முன்னிலை வகித்தனா். மூத்த மருத்துவா்கள் ஸ்டான்லி, சந்திரன், இளந்திரையன், ரேணுகாதேவி, சந்திரலாதன், கிருஷ்ணன், பாபு மற்றும் அரசு மருத்துவமனை முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவா்கள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, கொலையான பெண் மருத்துவரின் உருப்படத்துக்கு மலா் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com