மதுப் புட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது

பண்ருட்டியில் மதுப் புட்டிகள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மதுப் புட்டிகள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி நகரப் பகுதியில் மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், பண்ருட்டி உதவி ஆய்வாளா் சரண்யா மற்றும் போலீஸாா் மது கடத்தல், விற்பனை குறித்து சோதனை நடத்தினா்.

திருவள்ளுவா் நகரில் சோதனை நடத்தியதில், 180 மில்லி அளவுள்ள 10 மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் விமல்ராஜை (40) கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com