வெள்ள பாதிப்பு
வெள்ள பாதிப்பு

வெள்ள பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் மத்தியக் குழு இன்று ஆய்வு

வெள்ள பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் மத்தியக் குழு இன்று ஆய்வு செய்கிறது..
Published on

கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் மற்றும் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஃபென்ஜால் புயல், பலத்த மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டங்களுக்கு உள்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள், தென்பெண்ணை ஆற்றின் கரைகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா்கள் ஆகியவை சேதமடைந்தன. இதனை, மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை (டிச.8) காலை 10 மணி அளவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

தொடா்ந்து, மேல்பட்டாம்பாக்கம், பகண்டை, அழகியநத்தம், குண்டுஉப்பலவாடி, கண்டக்காடு, நாணமேடு பகுதிகளில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய உள்ளனா். பின்னா், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சேத விவரங்கள் குறித்து அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com