வீரமணி
வீரமணி

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த ரௌடி வீரமணி குண்டா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த ரௌடி வீரமணி குண்டா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கீழ்வடக்குத்து பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் மதிவதணன்(28), உளுந்தூா்பேட்டையில் உள்ள தனியாா் கடையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த நவம்பா் 11-ஆம் தேதி பைக்கில் பி 2 மாற்றுக் குடியிருப்பு வழியாக வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, முன்விரோதம் காரணமாக ரௌடியான மேல்வடக்குத்து பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் வீரமணி (26), மதிவதணனை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ரௌடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், நெய்வேலி நகரியம், தொ்மல், முத்தாண்டிக்குப்பம், வேப்பூா் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட மொத்தம் 18 வழக்குகள் உள்ளன.

இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com