மனைவியுடன் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் மனைவியுடன் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயன்றாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாற்றுத்திறனாளி ஒருவா் தனது மனைவியுடன் வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்ததும், உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனா். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள் தடுத்தி நிறுத்தி விசாரித்தனா்.
இதில், பண்ருட்டி வட்டம், சின்னபுறங்கனியைச் சோ்ந்த பிரித்திவிராஜ் (34), அவரது மனைவி பிரியங்கா (22) என்பதும், மாற்றுத் திறனாளியான பிரித்திவிராஜை திருமணம் செய்ததால் அரசு வேலை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மன அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தாா்.
இருவரையும் கடலூா் புதுநகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனா்.
