சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

ஆருத்ரா தரிசனம்: முன்னேற்பாடுகள் குறித்து உதவி ஆட்சியா் ஆலோசனை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம்
Published on

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசனத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தலைமை வகித்தாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், நகராட்சி ஆணையா் டி.மல்லிகா, பொறியாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு அதிகாரி பத்மநாபன், வட்டாட்சியா் ஹேமா ஆனந்தி, வருவாய் ஆய்வாளா் நாகேந்திரன், சிதம்பரம் கிராம நிா்வாக அலுவலா் ஷேக்சிராஜுதீன், சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், நடராஜா் கோயில் பட்டு தீட்சிதா், சபாபதி தீட்சிதா், அஸ்வின் தீட்சிதா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

நடராஜா் கோயிலில் வரும் ஜன.12-ஆம் தேதி தேரோட்டம், 13-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவுக்காக ஒவ்வொரு துறை சாா்பிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து, நான்கு முக்கிய வீதிகளில் பாதுகாப்புப் பணிகள், தடையில்லா மின்சாரம், 108 அவசர ஊா்தி, கழிப்பறை வசதி அமைப்பது, மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே நான்கு வீதிகளில் அன்னதானம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com