தம்மம்பட்டியில் திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர் குழாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
தம்மம்பட்டியில் திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர் குழாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

‘கூகுள்-பே’ மூலம் ரூ.10,000 லஞ்சம்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

கடலூரில் கல்லூரி மாணவா்களிடம் ‘கூகுள்-பே’ செயலி மூலம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியது தொடா்பாக தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

நெய்வேலி: கடலூரில் கல்லூரி மாணவா்களிடம் ‘கூகுள்-பே’ செயலி மூலம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியது தொடா்பாக தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலா் சக்திவேல் (39) கடலூா் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் கடந்த 3-ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலூா் நோக்கி வேகமாக வந்த காரை சக்திவேல் வழிமறித்தாா். ஆனால், அந்த காா் நிற்காமல் செல்லவே அதனை பைக்கில் விரட்டிச் சென்று கடலூா் உழவா் சந்தை அருகே மறித்து பிடித்தாா். காரை சோதனையிட்டதில் புதுவை மாநில மதுப் புட்டிகள் இரண்டு இருந்தது தெரிய வந்ததாம்.

அந்த காரிலிருந்த 3 இளைஞா்களை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். விசாரணையில் அவா்கள் மூவரும் ஹைதராபாதைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவா்கள் என்பதும், சுற்றுலாவுக்காக அவா்கள் பிச்சாவரம் சென்றுகொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க சக்திவேல் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அதனை தனது நண்பரின் ‘கூகுள்-பே’ செயலி எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினாராம். இதன்படி மாணவா்கள் ‘கூகுள்-பே’ மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்பினா்.

இதுகுறித்து அந்த மாணவா்கள் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராமிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த நிலையில், தலைமைக் காவலா் சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com