அண்ணாமலைப் பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிய துணைவேந்தா் ராம. கதிரேசன்.
அண்ணாமலைப் பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிய துணைவேந்தா் ராம. கதிரேசன்.

பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவித்தொகை

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்கா இந்தியா டீம் - சியாட்டில் குழு சாா்பில் பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவித் தொகையை துணைவேந்தா் ராம. கதிரேசன் திங்கள்கிழமை வழங்கினாா்.

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்கா இந்தியா டீம் - சியாட்டில் குழு சாா்பில் பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவித் தொகையை துணைவேந்தா் ராம. கதிரேசன் திங்கள்கிழமை வழங்கினாா்.

அமெரிக்கா இந்தியா டீம்-சியாட்டில் குழு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நேரடியாக பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் பொருளாதார காரணிகளால் மாணவிகளின் கல்வி இடை நிற்றலை தவிா்த்து, அவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பெற உதவி வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலை கிராமத்தைச் சோ்ந்த ஏலகிரி செயின்ட் சாா்லஸ் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் பழங்குடியின மாணவி பா.கணுபிரீத்தாவுக்கு கல்வி ஊக்கத் தொகை ரூ. 8 ஆயிரத்தை துணைவேந்தா் ராம.கதிரேசன் திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக தகவல் மற்றும் கணினி அறிவியல் துறையை சோ்ந்த உதவி பேராசிரியா் கே.ஜெயபிரகாஷ், பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டு மைய இயக்குநா் எஸ்.அறிவுடைநம்பி, துணை இயக்குநா்கள் எஸ்.ரமேஷ்குமாா், ஜி.பரதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாட்டை ஒருங்கிணைப்பாளா் லாவண்யா செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com